Monday 4 September 2017

Neet:

பேராசிரியர் அணில் சடகோபன் அவர்களின் உரைப்படி (லிங்க் : http://www.vikatan.com/news/coverstory/90047-this-is-the-connection-between-neet-exam-and-wto-imf-speaks-professor-anil-sadgopal.html)  நீட் தேர்வின் சர்வதேச அரசியலுக்கு எதிராக இந்திய தேசம் முழுவதும் எதிர்ப்பு எழுந்திருக்க வேண்டும்.

ஆனால் தமிழகம் மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு, கல்வி, பெரியாரிய கொள்கைகள், திராவிட கட்சிகள் அதன் சமூக நீதி காரணமாக இருக்கிறது.
இதில் கல்வி என்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. ஆனால் சமூக நீதி, பெரியாரிய கொள்கைகள், போன்றவற்றை மாணவர்களுக்கு கற்பித்தலில் ஆசிரியர்களின் பங்கு என்ன என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

உதாரணத்திற்கு எனக்கு சமூகநீதி என்பதன் அர்த்தமே நான்  கல்லூரி முடித்து பொது புத்தகங்களில் கற்றுக்கொண்டதுதான். என் நண்பர்களுக்கும் அதுவே, சிலர்க்கு இடஒதுக்கீடு குறித்த புரிதல் இன்றும் இல்லை.

நாம் இன்று அடைந்திருக்கும் நெருக்கடிக்கு மக்களின் ஒட்டு மொத்த எதிர்ப்புகள் வராததன் காரணமும் இதுதான்.
பாடப்புத்தகத்தை தாண்டி மாணவர்களுக்கு,  சமூக நீதியின் வரலாற்றையும், இடஒதுக்கீட்டின்  முக்கியத்துவத்தையும், கற்பிப்பதன் அவசியத்தை ஆசிரியர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.
சாதியும்,மதமும் மக்களை பிரித்தால செய்யும் சூழ்ச்சி என்பதை உணர்த்தியிருக்க வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் (CBSC உட்பட) பசங்க படிக்கிறது எல்லாம் தெண்டம், தனியார் நீட் கோச்சிங் கிளாஸ் போய் வாங்குகின்ற மதிப்பெண்கள் தான் மருத்துவ படிப்பிற்கு அவசியம் என்கிற அறிவிப்பிற்கு நியாயப்படி "ஆசிரியர்களுக்கும்" கோபம் வரணும்! குறைந்தபட்சம் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாவது செய்திருக்கலாம்.

சம்பள உயர்விற்க்கு போராடும் ஆசிரியர் சங்கம், நீட் எதிர்பிற்க்கு குரல் கொடுக்காமல் இருப்பது ஏன்??

மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ளாத உங்களிடம் இருந்து அவர்கள் என்ன கற்றுக்கொள்ள போகிறார்கள்? நீங்கள் கற்றுக்கொடுக்கும் கல்வி என்ன சமூக தாக்கத்தை அவனிடத்தில் ஏற்ப்படுத்தும் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை!

ஆக, மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் ஒருபுறம் இருக்க, இதில் ஆசிரியர்களின் பங்களிப்பும் முக்கியமென கருதுகிறேன்!

#ஆசிரியர்தினவாழ்த்துகள்

No comments:

Post a Comment